விவசாயம்
எதிர்கால வளர்ச்சியை நோக்கி
"சுழன்றும் ஏர்பின்னது உலகம்"என்ற
வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப
நம்நாடு விவசாயத்தையே உயிர்நாடியாக
தொழில் செய்து வந்துள்ளது .ஆனால்
இன்றைய விவசாயம் மற்றும் விவசாயிகள்
நிலை அகலபாதாளத்தை நோக்கி
சென்று கொண்டிருக்கிறது .
நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
விவசாய துறையின் பங்கு வெறும் 14%
மட்டுமே .விவசாயம் என்றால் என்ன என்றே தெரியாத நாடுகள் எல்லாம் இன்று கப்பலில் விவசாயம் செய்துகொண்டிருக்கின்றன.
ஆனால் விவசாய நாடான நாம் விவசாயத்தை மெல்ல இழந்து வருகிறோம் .
விவாயத்தின் அழிவை நிறுத்தி விவசாயியின் இன்னலை மாற்ற போர்க்கால அடிப்படையிலும் ,தொலைநோக்கு சிந்தனையுடனும் திட்டங்கள் தீட்டுவதன் மூலமே உலக அரங்கில்விவசாயத்துறையில் நாம் இழந்த இடத்தை அடைவதுடன் உலகத்திற்கே உணவளிக்கும் உன்னத விவசாய நாடாக நம்மால் மாற இயலும் .
நான் விவசாயத்துறை அமைச்சரானால் விவசாயத்தை மேம்படுத்த என்னுடைய பார்வையில் தீட்டிய திட்டங்கள் தங்கள் பார்வைக்கு
போர்க்கால திட்டங்கள் .
* விவசாயிகளுக்கான விதைநெல்,உரம் போன்றவற்றை அரசே இலவசமாக வழங்க வேண்டும் இதன்மூலம் அறுவடை செய்யப்படும் நெல்லை அரசே கொள்முதல் செய்து கொள்ளும் .
* அந்தந்தப் பகுதியில் விளையும் பொருட்களை அரசே சந்தைப்படுத்தும்
*சிறு குறு தானி்யங்களை(உ.ம் சாமை ,கம்பு ,கேழ்வரகு )அரசே நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
* கரும்புக்கான ஆதார விலையை நிர்ணயிக்க விவசாய சங்கங்களின் தலைமையில் விலை நிர்ணயிப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.
* கரும்பின் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஊக்குவிக்கப்படும்.
* விவசாயிகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
*விவசாயிகளுக்கு ஆலையில் இருந்து தரப்பட வேண்டிய நிலுவைத்தொகை உடனடியாக வழங்க வகைசெய்யப்படும்.அப்படி வழங்காத பட்சத்தில் ஆலைகளின் உரிமை ரத்து செய்யப்படும்.
* மாநில மரமான பனை மர தொழிலாளர்கள் நலன் காக்க பனை நல வாரியம் ஏற்படுத்தப்படும்.
* போர்க்கால அடிப்படையில் கருவேல மரங்கள் அகற்றப்படும்.
தொலைநோக்கு திட்டம்
*விவசாயத்திற்கு தனிபட்ஜெட் அறிவிக்கப்படும் .
* மொத்த பட்ஜெட் நிதியில் 50%விவசாயத்திற்கு ஒதுக்கப்படும்.
* விவசாய பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயிக்கும் வகையில் "விலை நிர்ணய குழு" ஏற்படுத்தப்படும்.
* அனைத்து ஊராட்சிகளிலும் இயற்கை உரம் தயாரிக்கப்படும்.இதில் பணியாற்றுபவர்கள் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்.
* அனைத்து ஊராட்சியிலும் அளவுக்கு ஏற்ப கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் கிடங்குகள் அமைக்கப்படும்.
* தஞ்சை ,திருவாரூர்,நாகை மாவட்டங்களில் ஒருங்கிணைந்த வேளாண் பல்கழைக்கழகம் அமைக்கப்படும்.
* ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
*கோவையில் பனை மற்றும் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
* கள் பதப்படுத்தி விற்பனை செய்ய பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும்.
* நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்.
இந்த பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படும்.
*விவசாய தொழிலாளர்களை நாட்டின் காவலர்களாக அறிவித்து அனைத்து விதமான மருத்துவசதிகளும் இலவசமாக வழங்கப்படும்.
* விவசாயிகளின் நலனை காக்கும் வகையில் 65வயதிற்கு மேல் மாதம் 3000ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
*மாவட்டம்தோறும் அரசு கரும்புஆலைகள் தொடங்கப்படும்.
*கரும்பிற்கான தொகை உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
* நெல் மட்டுமே பயிரிடப்படாமல் அரியதானியங்கள் பயிரிடப்படுவது ஊக்குவிக்கப்படும்.
* அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் விவசாய கண்காட்சி நடத்தப்படும்.
* வெளிமாநிலங்களில் நடக்கும் விவசாய கருத்தரங்கில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகள் அரசு சார்பில் அனுப்பிவைக்கப்படுவர்.
* அனைத்து பள்ளிகளிலும் விவசாயம் கட்டாய பாடமாக்கப்படும்.
*விவசாயத்தில் இயற்கையோடு இயைந்த கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.
*பொருட்டுதஎண்ணெய்வித்து விவசாயத்தில் ஈடுபடுவோரை சிறப்பு கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உற்பத்திக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* கால்நடைவளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு தீவனப்பயிர் வளர்ப்பு வாய்ப்புள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்.
* மண் பரிசோதனை செய்து மண்வளத்திற்கு ஏற்ப பயிர் பயிரிடப்படும்.
* பருத்தி பயிரிடுதல் ஊக்குவிக்கப்படும்.
* படிப்படியாக அனைத்து வேளாண் பொருள்களுக்கும் இறக்குமதி தடை செய்யப்படும்.
* பாரம்பரிய நெல்ரகங்கள் பயிரிட ஊக்குவிக்கப்படுவர்.
*ஊராட்சிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான கருத்துகளை பெற விவசாய நண்பன் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும்.
*சிறு,குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி பட்டுபுழு வளர்ப்பு விரிவுபடுத்தப்படும்.
*மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பண்ணை குளத்திட்டம் அமைக்கப்படுஅமைக்கப்படும்.
*மீன் குஞ்சுகள் மானிய விலையில் வழங்கப்படும் .
*தேயிலை தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
நீர் மேலாண்மை ;
*"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்"
என்றார் இளங்கோவடிகள்.ஆனால் இன்று மழையை போற்றும் நிலையில் நாம் இல்லை.மழையை தேக்கும் நிலையில் இருக்கிறோம்.
இப்போது இருக்கும் நீரை முறையாக பயன்படுத்துவதிலும்,நீரை மாசுபடுவதிலிருந்து தடுப்பதாலும்,நீர் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதன் மூலமே மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும்.
ஆம்! உலக நாடுகளின் கணிப்பின் படி தண்ணீருக்காக மூன்றாம்உலகப்போர் நடந்தாலும் நடக்குமாம்.உலகப்போர்களை தடுக்க அரசு மட்டுமே செயல்பட்டால் முடியாது.நாம் தண்ணீரை சேமிப்பதன் மூலமும் தடுக்க முடியும்.
*பெய்யும் மழையில் ஒரு துளி கூட கடலில் கலக்காமல் தேக்கிவைக்க வழி செய்யப்வேண்டும்.
*இதுவரை கட்டப்பட்ட கட்டிடங்களிலும் இனிமேல் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர்சேகரிப்பு கட்டாயமாக்கப்படும்.
*மழை நீர் சேகரிப்புக்காக மழைநீர் சேகரிப்பு துறை தொடங்கப்படும்
*சொட்டுநீர்பாசணம்,தெளிப்பு நீர் பாசணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவர்.
*சோலார் பம்ப்செட் அமைக்க 75% மானியம் வழங்கப்படும்.
*போர்வெல் மற்றும் ஆழ்துளைகிணறுகள் முறையாக தணிக்கை செய்யப்படும்.
*ஆறுகள்,குளங்கள்,வாய்க்கால்கள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படும்.
*ஆறுகள் மற்றும் குளங்களின் கரைகளில் மண்அரிப்பை தடுக்க மரம்நடுதல் தொடங்கப்படும்.
*மரங்களின் பராமரிப்புமுறையாக கண்கானிக்கப்படும்.
*ஊரக வேலைவாய்ப்பு திட்டம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும்.
*அனைத்து ஊராட்சிகளிலும் குளம்அமைத்தல் கட்டாயமாக்கப்படும்.
விவசாயத்தின் வளர்ச்சிக்கு இவை மட்டுமே போதாது.இது போன்ற இன்னும் பல திட்டங்கள் தீட்ட வேண்டிய காலம் நெருங்கிகொண்டிருக்கிறது.விவசாயத்தின் முக்கியதுவத்தை இன்றைய இளைஞர்கள் உணர்ந்தால் மட்டுமே விவசாயத்தை அழிவிலிருந்து காப்பற்ற இயலும்.விவசாயத்தை காப்பாற்ற. அறைகளில் அமர்ந்து திட்டங்கள் தீட்டினால் மட்டும் போதாது.களப்பணி ஆற்றவும் தயாராகிவருகிறது இளையதலைமுறை.
விவசாயத்தை காக்க! விவசாயிகளின்இன்னலை போக்க!!
ஆதரிப்பீர்
இளையதலைமுறை
தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்பவர்கள் ஆதரிக்க
முகநூலில் பின்தொடர
https://www.facebook.com/TN.ilayathalaimurai
தமிழக அரசியலில் மாற்றத்தை விரும்பவர்கள் ஆதரிக்க
முகநூலில் பின்தொடர
https://www.facebook.com/TN.ilayathalaimurai